இணையத்திற்கு அதிகளவில் அடிமையாகும் இலங்கையர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

0
98

கொரோனா தொற்று காரணமாக 2023 ஆம் ஆண்டளவில் இணையத்தைப் (internet) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இலங்கை சனத்தொகையில் 66% ஆக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் இது குறித்து முறையான ஆய்வு நடத்தி, இணையத்துக்கு அடிமையாகி இருக்கும் குழந்தைகளை மீட்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக அவர் கூறினார்.

குழந்தைகளை மீட்க நடவடிக்கை எதுவுமில்லை
ஆனால் இலங்கை இதுவரையில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here