லியோ படத்தின் முதல் பத்து நிமிடமும், கிளைமாக்ஸ் காட்சிதான் மாஸ் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில், அதையும் பேன்ஸ் வீடியோவாக வெளியிட்டு அலப்பறை செய்துள்ளனர்.
லியோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்களின் ஆர்வக் கோளாறால் டைட்டில் கார்டு முதல் கிளைமாக்ஸ் வரை இணையத்தில் காணொளிகள் வெளியாகி உள்ளது.
ஆயுதபூயை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்துவிட்டது.
கேரளா மற்றும் கர்நாடகாவில் லியோ படம் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்காததால் காலை 9 மணிக்கு அனைத்து திரையரங்கிலும் சற்று முன் திரைப்படம் திரையிடப்பட்டது.
லியோ படத்தை முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் டைட்டில் முதல் படத்தின் முக்கியமான சீன்களை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். ரசிகர்களின் இந்த செயல் படம் பார்க்காதவர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.
லியோ படத்தின் முதல் பத்து நிமிடமும், கிளைமாக்ஸ் காட்சிதான் மாஸ் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில், அதையும் பேன்ஸ் வீடியோவாக வெளியிட்டு அலப்பறை செய்துள்ளனர்.
அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால், படத்தின் சுவாரசியம் போய்விடும் என்று படக்குழுவினர் அதிருப்தியில் உள்ளனர்.
Thank You #LokeshKanagaraj For Showing The Real Performer Of #ThalapathyVijay Anna In #Leo🙏🏻😘🥳 @actorvijay
It's 💯 Your Film @Dir_Lokesh
🇲🇾 fans all over positive reviews only 🎉💥🔥#Thalapathy #LeoFDFS #LCU #LokeshCinematicUniverse pic.twitter.com/nDRY4IutUr
— 🇲🇾Endrum Thalapathy&Thalaivan rasigan🔥🇲🇾 (@Kaarthik2304) October 19, 2023