இந்திய அரசாங்கத்தின் கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பஸ்களில் 06 பஸ்களை ஹட்டன் டிப்போவால் கிராமிய மற்றும் தோட்டங்களை மையப்படுத்தி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் டிப்போவின் சிரேஸ்ட பரிசோதகர் ஏ.சி.ஹேஸ் தெரிவித்தார்.
இதற்கமைய டெம்பஸ்டோ, அப்புகஸ்தென்ன, நாவலபிட்டி கினிகத்தேனை, மஸ்கெலியா ஹங்கராபிட்டிய திஸ்பனே உள்ளிட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி திட்டத்தின் கிராமிய மற்றும் தோட்ட வீதிகளில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக வழங்கப்பட்ட பஸ்களில் கண்டி மற்றும் நுவரெலியாவக்கு 26 பஸ்கள்; அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பஸ்களில் ஆறு பஸ்களே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்