இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய தலைநகா் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் முப்படைகளின் மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி, 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்புஅமுல்படுதத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.