இந்தியா உட்பட 3 நாடுகளுக்கு கனடா பிரதமர் பயணம்!

0
3

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா உட்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் முதலில் இந்தியாவுக்கு நாளை மறுநாள் வருகை தருகிறார். இதன்படி மும்பை நகருக்கு வரும் அவர், இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.

அப்போது தொழிலதிபர்களையும் சந்திக்கிறார். இதேபோன்று ஆஸ்திரேலியா நாட்டுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார். அப்போது கான்பெர்ரா நகரில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவார். 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு கனடா பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீசையும் அவர் சந்தித்து பேசுகிறார். இதன்பின்னர் ஜப்பானின் டோக்கியோ நகருக்கு செல்லும் அவர், ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி சனேவை சந்திக்க உள்ளார்.

இந்த 3 நாடுகளுக்கான கனடா பிரதமரின் பயணத்தின்போது, 3 நாடுகளின் பிரதமர்களையும் நேரில் சந்தித்து வர்த்தகம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here