ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு குரோஷியா. இந்நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகம் உள்ளது. இந்நிலையில், இந்திய தூதரகத்தின்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய கொடியை அகற்றியுள்ளனர். மேலும், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காலிஸ்தான் ஆதரவு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரோஷியாவில் இந்திய தூதகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் குரோஷியா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.




