இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், வெள்ளிக்கிழமை (செப். 19) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் உதவிகளுக்கு, குறிப்பாக நாடு கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்ட சமயத்தில் மேற்கொண்ட உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு முக்கியமான காலகட்டத்தில் இலங்கையை நிலைப்படுத்த உதவுவதில் இந்தியாவின் ஆதரவு மிக முக்கியமானது என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.




