இந்திய பேட்மிண்டனை உலக அரங்கிற்கு கொண்டு சென்றீர்கள் – சாய்னாவுக்கு சச்சின் புகழாரம்!

0
54

முன்னாள் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சாய்னா நேவால் பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபனில் கடைசியாக விளையாடிய சாய்னா நேவால், மீண்டும் மைதானத்திற்குத் திரும்பப் போவதில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அறிவித்தார்.

இந்த நிலையில், பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்ற சாய்னா நேவாலுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

‘சாய்னா, நீங்கள் இந்திய பேட்மிண்டனை உலக அரங்கிற்கு கொண்டு சென்றீர்கள். பதக்கங்களையும் தாண்டி உங்களது மிகப்பெரிய சாதனை ஒன்று உள்ளது. அது, நாடு முழுவதும் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உலக அளவிலான வெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கையை கொடுத்து உத்வேகம் அளித்தீர்கள்.

ஒவ்வொரு விளையாட்டு பயணமும் பரிணமித்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டம் முடிவடையும் போது, ​​மற்றொரு கட்டம் தொடங்குகிறது. உங்கள் அனுபவம், கண்ணோட்டம் மற்றும் விளையாட்டு மீதான அன்பு பலரை தொடர்ந்து வழிநடத்தும். இந்திய விளையாட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி. உங்களது தாக்கம் தலைமுறைகள் கடந்து உணரப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here