இந்திய வம்சாவளி பாடகி கனடாவில் கொலை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

0
2

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பாடகியும் யூடியூபருமான நான்சி கிரேவால் (Nancy Grewal) மர்ம நபரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடகியும் யூடியூபருமான நான்சி கிரேவால், கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் வசித்து வந்தார். இதற்கிடையில், அவரது வீட்டுக்குள் திடீரென அத்துமீறி நுழைந்த மர்ம நபர், அவரை குத்திக் கொன்றுவிட்டு தப்பினார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலைக்கு தனிப்பட்ட பகை அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

நான்சி கிரேவால் தனது யூடியூப் வீடியோக்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கடுமையாக விமர்சித்து வந்ததாகவும், அதனால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here