இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய பின் கருத்து தெரிவித்த ஜீவன்.

0
188

எனது தலைமையிலான இ.தொ.காவின் குழுவினர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லா அவர்களுக்கும் இடையிலான நட்பு ரீதியான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்கப்படவிருக்கும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் மலையகத்தில் கொட்டகலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகம் தொடர்பாகவும் அப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடினேன்.

அத்தோடு பெருந்தோட்ட பகுதிகளின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும், இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலையக பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றது இவ்விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினேன்.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here