வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகு இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்துக்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கதேசத்தின் நரசிங்கடி நகரில் நேற்று முன்தினம் இரவு சஞ்சல் பவுமிக் (25) என்ற இளைஞர் கேரேஜுக்குள் உறங்கிக் கொண்டிருந்த போது எரித்துக் கொல்லப்பட்டார்.




