அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நீண்டகால பேரவை உறுப்பினர் தியாகராஜாவின் மறைவு செய்தியை கேட்டு கவலையடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமரர் தியாகராஜா நீண்டகாலமாக ஆன்மீக பணிகளில் ஈடுபட்டவர்கள். அவரது ஆன்மீகச் செயற்பாடுகள் மிகவும் பேற்றத்தக்கவையாகும். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நீண்டகால உறுப்பினராக இருந்த அவருடன் நானும் இணைந்து பல சந்தர்ப்பங்களில் பணியாற்றியுள்ளேன்.
அன்னாரின் இழப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது குடும்பத்திற்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் – என்றும் எஸ்.ஆனந்தகுமார் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.



