இந்தோனேசியாவில் திடீா் வெள்ளம் – 16 போ் பலி!

0
82

இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 போ் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளர் அப்துல் முஹாரி நேற்று தெரிவிக்கையில்,

பல நாள்களாக பெய்த பருவமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு திங்கள்கிழமை அதிகாலை ஆறுகளின் கரைகள் உடைத்தன. சேறு, பாறைகள், இடிபாடுகளுடன் வெள்ள நீரால் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

சியாவ் தகுலண்டாங் பியாரோ மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் மூழ்கின. இந்தச் சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துள்ளதுடன் 148 பேரைக் காணவில்லை.

அவசர மீட்புப் படையினர் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here