இன்டர்நெஷனல் ரி20 லீக்கில் எட்டு இலங்கையர்கள்!

0
12

நான்காவது தடவையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் டிசம்பர் மாதம ஆரம்பமாகவுள்ள இன்டர்நெஷனல் ரி20 லீக் தொடரில் விளையாட இலங்கையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

நடப்பு சம்பியனான டுபாய் கெபிட்டல்ஸ் அணி தசுன் ஷானகவையும், துஷ்மந்த சமீரவையும் தக்கவைத்துள்ளது. சரித் அசலங்க அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ளார்,

வனிந்து ஹஸரங்க டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளார். எம்.ஐ. எமிரேட்ஸ் அணி கமிந்து மெண்டிஸை ஒப்பந்தம் செய்ய, மஹீஷ் தீக்ஷன சார்ஜா வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் குசல் பெரேரா (எம்.ஐ எமிரேட்ஸ்), குசல் மெண்டிஸ் (சார்ஜா வொரியர்ஸ்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here