இன்று புதன்கிழமை மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், ஒரு மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்திருந்த நிலையில் மின் துண்டிப்பு இடம்பெற்றது.
எனினும், தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, நேற்று மின்துண்டிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.