இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் (450கிராம்) பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒரு பாண் ஒரு இறாத்தலின் விலை 110 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள், 10 ரூபாவினால் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினாலும், செரண்டிப் நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த நிலையில் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றன.மேலும் வாசிக்க