இன்று முதல் ஆரம்பமாகும் கதிர்காம எசல பெரஹரா : 16 நாட்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய தடை

0
212

குறித்த நாட்களில் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பில் புகாரளிக்க 1913 என்ற தொலைபேசி இலக்கத்தை கலால் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க ருஹுனு கதிர்காம மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா இன்று முதல் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.குறித்த திருவிழா இன்று முதல் 16 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ள நிலையில் ருஹுனு கதிர்காம மகா தேவாலயத்தின் சுற்றுவட்டார பகுதியை மதுவிலக்கு வலயமாக வைத்திற்காக கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கான சிறப்பு நடவடிக்கையாக எசல பெரஹராவை காண வரும் இலட்சக்கணக்கான பக்தர்களுடன் சாதாரண உடையில் சிறப்பு கூடுதல் படையினர் கடமையில் ஈடுபடவுள்ளனர் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அனைத்து ஹோட்டல்கள், உணவகங்கள், மற்றும் மதுபானசாலைகளில் குறித்த 16 நாட்களுக்கு மதுபானம் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் எதிர்வரும் நான்காம் திகதி வரையான காலப்பகுதியில் ஊவா மாகாண பிரிவில் உள்ள பிரதேசங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மிகவும் அவதானத்துடன் கடமையில் ஈடுபடவேண்டும் என குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த நாட்களில் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பில் புகாரளிக்க 1913 என்ற தொலைபேசி இலக்கத்தை கலால் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் எசல திருவிழாவை காண செல்லும் பக்தர்கள் மதுபானங்கள் , போதைப்பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்குமாறும் கலால் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here