பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று அதிகாலை வெளியான வதந்திகளை மறுத்துள்ளார்.
இது முழுப் பொய், நான் ஒரு நோயாளியைப் பார்க்கக் கூட மருத்துவமனைக்கு செல்லவில்லை. நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். இன்றும் இந்த இளைஞர்களுடன் எனக்கு ஓட முடியும் என்று ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோது பிரதமர் கூறியுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கமொன்று அமைவதாக இருந்தாலும் அது எனது தலைமையின் கீழ் தான் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.