மேஷம்
தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். திருமணமானபின் சில கடமைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம். கலைஞர்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை கைக்கு வந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்ஊதா
ரிஷபம்
நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். கர்ப்பிணி பெண்கள் உடல் நிலையில் கவனம் தேவை. இல்லையென்றால் தேவையற்ற மனக்கவலைகள் வந்து விடும். மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும. இல்லாவிட்டால மதிப்பெண் விசயத்தில் கோட்டை விடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
மிதுனம்
நினைத்த காரியம் வெற்றி பெறும். உடல் நலனின் கவனம் தேவை. வெளி வட்டாரங்களில் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். இன்று வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இண்டர்யூவில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நவீன தொழில் நுட்ப கருவிகளை புதிதாக வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்




