டே்ஷகானா (Toshakhana) வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி (Bushra Bibi) ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இருவருக்கும் தலா ரூ.1.64 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் வயது முதிர்வை கருத்திற் கொண்டும் புஷ்ரா பீபி ஒரு பெண் என்பதையும் கருத்திற் கொண்டு இருவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் குறைந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ரும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.




