இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் : ஆபத்தான நிலையில் பெண்

0
121

பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்டதன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here