இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக ஆடை தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

0
171

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஆர். ரமேஸ்வரன் தலைமையில் தோட்டப்புற இளைஞர்களின் சுயத்தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் வாழ்க்கைக்கு கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் 1200வது வேலைத்திட்டமாக ஆடை தொழிற்சாலை இரத்தினபுரி வெவல்கட்டிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள்,பிரதேச சுகாதார ஆலோசகர், இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள்,தோட்ட நிர்வாக உறுப்பினர்கள்,பயனாளர்கள்,பொதுமக்கள்,சமூக ஆர்வாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here