இரவில் பணியமர்த்தப்படும் பெண்கள் குறித்த அதிவிசேட வர்த்தமானி!

0
61

18 வயதுக்கு மேற்பட்ட பெண் துப்புரவு பணியாளர்கள் மற்றும் உணவு சேவை ஊழியர்களை மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பணி அமர்த்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவின் கையொப்பத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

வர்த்தமானியின்படி, பணி நேரத்தின் போது அல்லது அதற்குப் பிறகு பணியாளரின் குடியிருப்புக்கு பொருத்தமான தங்குமிடம் அல்லது போக்குவரத்து வசதிகளை முதலாளி வழங்க வேண்டும்.

கூடுதலாக, இந்த ஊழியர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் பொது நலனுக்கு முதலாளி பொறுப்பேற்கிறார் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here