சுக்கு, உப்பு இரண்டையும் அரைத்து தொண்டையில் பூசினாலோ அல்லது பனங் கற்கண்டோடு மிளகு சேர்த்து உண்டாலோ இருமல் நின்று விடும்.
இஞ்சி வறண்ட இருமலை எளிதில் நீக்கக் கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும், உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்கள் மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக் கொண்டால் சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களைச் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் ஒரு கரண்டி நெய் ஊற்றி, பூண்டைப் பொரித்து எடுக்கவும், பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம்.
இவ் இயற்கை வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் சளி, இருமலில் இருந்து விடுபடலாம்.