கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு இறகுவானை டெல்வின், ஒரேஞ்பீல்ட், கொட்டல, அழுத்பார, மெதகங்கொட, மற்றும் நெதுன்கெடிய போன்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த கொவிட் -19 நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இந்த நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதன்போது இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர்களான ஜெயகுமார் செல்லதுரை, ராகுல் உதயகுமார், சதீஸ் மற்றும் இ.தொ.கா மாவட்ட தலைவர் லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த பிரதேசங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு இ.தொ.காவின் இளைஞர் அணி அமைப்பாளர் காலிட் அஜுன்குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் முன்வந்து மக்களுக்கு உதவி செய்யும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு மாரதென்ன தோட்ட மக்கள் நன்றி தெரிவித்ததாக இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.