ஐபிஎல் 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்காக ரூ.32.30 கோடியை செலவிட்டுள்ளது. மினி ஏலத்துக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை ரூ.18.10 கோடிக்கு டிரேடிங் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீரர்கள் மினி ஏலத்தில் 19 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவை பலத்த போட்டிக்கு இடையே சிஎஸ்கே அணி வாங்கியது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரரை அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணியாக சிஎஸ்கே மாறியது. தற்போது தோனியுடன் சேர்த்து சிஎஸ்கே அணியில் 4 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளன. ஏற்கெனவே தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உர்வில் படேலும் உள்ளார். 2008 முதல் தோனியை மட்டுமே பிரதானமாக நம்பி உள்ள சிஎஸ்கே அணியின் இந்த அணுகுமுறை புதிதாக பார்க்கப்படுகிறது.




