இலங்கைக்குள் விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!

0
117

பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இலங்கைக்குள் எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது.

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதால் இலங்கையின் பெரும்பான்மை சமூகம் விஜய்மீதான வெறுப்புக்களை அதிகம் வௌிப்படுத்துவதை காண முடிகிறது.

விஜயின் கச்சதீவு தொடர்பிலான பேச்சுக்கு இலங்கையின் அதியுயர் அரசியல் களத்திலிருந்தும் எதிர்ப்பு வௌிப்படுத்தப்பட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர் விஜய்யின் மீதான வெறுப்பு பேச்சுக்களை கட்டவிழ்த்து விட்டனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்டத்தில் இடம்பெற்ற துயரச் சம்பவம் விஜய் மீதான வெறுப்பு பேச்சுக்களை இலங்கைக்குள் மேலும் பலப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here