இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்
குறித்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.