இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

0
202

ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.குறிப்பாக டீசல் மற்றும் பெற்றோல் ஆகியன இவ்வாறு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 40000 மெற்றிக் தொன் எடையுடைய டீசல் நேற்றைய தினம் இறக்கப்பட்டதாகவும் இதற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இரண்டு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கியூஆர் குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதனால் கையிருப்பில் உள்ள எரிபொருளை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், இந்தியன் ஒயில் நிறுவனமும் எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here