இலங்கையின் பொருளாதாரதை அபிவிருத்தி செய்ய கைத்தொழில் அமைச்சின் நடவடிக்கை.

0
126

இலங்கையின் பொருளாதாரதை அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டு முதலீட்டார்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்து இலங்கையில் வர்தகம் ஆரம்பிப்பதற்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்துவருவதற்கும் விசேட (யுனிட்) பிரிவு ஒன்றை எனது கைத்தொழில் அமைச்சில் ஆரம்பித்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளேன்.

என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவருமான எஸ். பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்ட செயலக அதிசய மண்டபத்தில் நேற்று (10) வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளீர் தின வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய பொழுது
திஸாநாயக்க கூறினார்.

நுவரெலியா மகளீர் அமைப்பின் தலைவியும் நுவரெலியா பிரதேசசபை உறுப்பினரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான திருமதி விமாலி கருணாரட்ன தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நுவரெலியா மாநகரசபை எதிர்கட்சி தலைவரும் முன்னாள் மாநகர முதல்வருமான மஹிந்த குமார, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி எஸ். பி. கே . போதிமான முன்னாள் நுவரெலியா மாநகரசபை உறுப்பினரும் அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்கவின் இணைப்பு செயலாளருமான மோமமட் பளீல் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

அங்கு அமைச்சர் திஸாநாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று மின்சாரம் விநியோகம் மூலம் வருடம் ஒன்றிற்கு 91 ஆயிரம் கோடி அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்ட போதிலும் வருடத்திற்கு ஊழியர்களுக்கு 3 போனஸ்கள் வழங்குகின்றது. ஒரு மாதத்திற்கு மாத்திரம் 550 இலட்சம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுகின்றது.

அதேபோல ஒரு லீற்றர் டீசலுக்கு 88 ரூபா மேலதிக நட்டம் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்றது.இதற்கு யார் பதில் கூறுவது. இந்த டீசல் பிரச்சனையை பாவணையாளர் களிடம் கூறவேண்டும்.இந்த நட்டத்தை நாம் பகிர்ந்துக்கொள்ளவேண்டும். எனவே டீசல் மற்றும் பெற்றோலை கவணமாக
பாவிக்க வேண்டும்.என்பதை புரிந்து நடந்துக்கொள்ளவேண்டும்.

இன்று ஒரு லீட்டர் டீசல் 143 ருபாவாக விலை உயர்துள்ளது . இந்த விலை உயர்விற்கு காரணம் ரஷ்யா உக்ரைன் யுத்தம்தான் காரணம். இந்த யுத்தம் காரணமாகவே எரிப்பொருள் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.இதை எங்களால் விலை உயர்வை தடுக்க முடியாது.

இன்று மகளீர்தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். உலகத்திலே முதன்முறையாக பெண் ஒருவர் பிரதமராகியதுஇலங்கையில்தான். முதலாவது பிதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அதன் பின்தான் இந்தியாவில் இந்திராகாந்தி பிரதமராகினார். அதே போல இலங்கையில் ஜனாதிபதியாக திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும்இருந்துள்ளார். இன்றும் பல உயர் பதவிகளில் பெண்கள் இருக்கின்றனர். இலங்கையில் பெண்களுக்கு நன்மதிப்பு இருக்கின்றது. என கூறினார்.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here