இலங்கையில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு

0
153

இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நிர்மாணத்துறையில் இவ்வாறு தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டு இளைஞர்கள் யுவதிகள் ஜப்பானிய மொழி புலமை பரீட்சையில் சித்தியடைந்து இந்த தொழில்வாய்ப்புகளை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட பரீட்சை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here