இலங்கை இராணுவம் தொடர்பில் போலித் தகவல்!

0
114

கடந்த சில நாட்களாக இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து இலங்கை இராணுவம் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காக பல அதிகாரிகள் இராணுவத்திலிருந்து நீக்கப்படுவதாக வெளியான வதந்திகள் தவறானவை என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினர் தங்கள் சொந்த குறுகிய இலக்குகளை அடைவதற்காக பொறுப்பற்ற முறையில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here