இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழு

0
256

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

7 பேர் கொண்ட குழு அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க செயற்படுகின்றார்.

அதேவேளை இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று நியமிக்கப்பட்ட புதிய இடைக்காலக் குழு அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அதற்கான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here