இலங்கை, தெற்காசியாவின் நம்பகமான நண்பர்!

0
7

இலங்கையுடனான நீண்டகால கூட்டாண்மைக்கான உறுதிப்பாட்டை, ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தமது நாட்டின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், தமது நாட்டை பொறுத்தவரை, இலங்கை, தெற்காசியாவின் நம்பகமான நண்பர் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரு தரப்பு உறவுகள், ஆழமானதும், சாதகமானதுமான, வரலாற்றைக் கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற ஆசியான் மாநாட்டிற்கு இடையே, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது ரஷ்ய – இலங்கை உறவு மற்றும் சர்வதேச தளங்களில் ஒத்துழைத்துச் செயற்படுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பு மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை அனுப்பிய செய்தியை வரவேற்பதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த சந்திப்பு தொடர்பில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், சர்வதேச ரீதியாக ரஷ்யா இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுக்குத் தாம் நன்றி தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார துறைகளில் இரு தரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here