இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, 3 ஒருநாள் சர்வதேச மற்றும் மூன்று 20 க்கு 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள முதலாவது போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில், இலங்கை அணி, 3 சுழற்பந்து வீச்சாளர்களைப் இணைத்துக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குசல் ஜனித் பெரேரா, கொவிட்-19 தொற்று காரணமாக இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், மினோத் பானுக்க மற்றும் தினேஸ் சந்திமால் ஆகிய இருவரில், விக்கெட் காப்பாளராக மினோத் பானுக்க விளையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, நீண்ட நாட்களுக்குப் பின்னர் அணிக்குழாமில் இணைக்கப்பட்டுள்ள தினேஸ் சந்திமால் இன்றைய போட்டியில் பங்கேற்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.