இவ்வாண்டில் இதுவரையில் 200 டெங்கு மரணங்கள் பதிவு

0
236

கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவானதை விட கடந்த 6 மாதங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்
இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு காய்ச்சல் காரணமாக 200 மரணங்கள் பதிவாகியுள்ளன.அதன்படி, கொழும்பு மாவட்டம் அதிக அபாயம் மிக்க வலயமாக இனங்காணப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, முப்படையினரின் ஒத்துழைப்புடன் இவ்வாரம் கொழும்பில் சுற்றுச் சூழலை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவானதை விட கடந்த 6 மாதங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு தீவிர நிலைமையை கட்டுப்படுத்த விசேட அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்ட நிலையில் அக்குழுவினால் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here