தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது மிகுந்த வருத்தமளிப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,“தற்போது நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.
காஸாவில் நடந்துவரும் தாக்குதல்களும், மக்கள் படும் துயரும் என்னை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது பெரும் அழிவுகளையும், உயிரிழப்புகளையும் தரப்போகின்றது.” என்றார்.
86 வயது நிரம்பியுள்ள போப் பிரான்சிஸ் தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை மற்றும் ஓய்வு பெற்றுவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.