ஈரானில் நிலஅதிர்வு

0
28

ஈரானில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு நிலஅதிர்வு பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இன்று காலை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

குறித்த நிலஅதிர்வு 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமையும், ஈரானின் தெற்குப் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்த நிலையில், சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்ரேலும் அமெரிக்காவும் இஸ்லாமியக் குடியரசு மீது தாக்குதல்களைத் தொடங்கி மத்திய கிழக்கு முழுவதும் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here