உக்ரைன்-ரஷ்ய போர்; ஐரோப்பிய தலைவர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பு

0
13

உக்ரைன்- ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாளை ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரைன் தலைவர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

ரஷ்ய தலைவர் புடின் மற்றும் டிரம்புக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

இதற்கமைய ‘வொஷிங்டனில் நாளை (திங்கட்கிழமை) டிரம்பை சந்திக்கிறேன். அப்போது போர் நிறுத்தம் குறித்து விரிவாக விவாதிப்போம். இந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ என ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். அத்துடன் அவர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் பேசியதாக கூறினார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நாளை நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர் என கூறப்படுகின்றது.

பேச்சுவார்த்தை ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும் என்று ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்த நிலையில், அழைப்பை ஏற்று ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.இதேநேரம் போர் விடயத்தில் ஐரோப்பிய நாடுகள் பங்கெடுக்கவேண்டும் என டிரம்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here