மனிதர்கள் ஒவ்வொரும் பல்வேறு வடிவிலான மூக்கமைப்பினைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு குணாதிசயங்களை மற்றும் வித்தியாசம் உள்ள எண்ணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மனிதர்களுடைய ஒவ்வொரு அங்கங்களும் வெவ்வேறு வடிவிலானதாக இருப்பதும் அவர்களுடைய குணாதிசயத்தை சொல்ல வைப்பதற்கு ஏற்புடையதாக இருக்கிறது. இவ்வகையில் இந்த எட்டு மூக்கில் உங்களுடைய மூக்கு எது? என்று தெரிந்து கொள்ளுங்கள்!இது தொடர்பில் இஸ்ரேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வின் படி மனிதர்களுடைய மூக்கு எட்டு வகைகள் கொண்டவையாக இருக்கின்றது என்று கூறியுள்ளனர்.
மூக்கு 1 நுபியன் மூக்கு:
இந்த நுபியன் மூக்கை கொண்டவர்கள் எப்பொழுதும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பார்கள். புத்தம் புதிய சிறப்பான வகையில் படைப்புகளை கொடுப்பவர்களாக விளங்குவார்கள். அதிக நண்பர்களை கொண்டவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். எதிலும் துறுதுறுவென ஆர்வம் கொண்டு செயல்படுவார்கள். சமூகத்தின் மீது இவர்களுக்கு அக்கறை அதிகமாகவே இருக்கும்.
மூக்கு 2 கிரேக்க மூக்கு:
இந்த கிரேக்க மூக்கை கொண்டவர்கள் எளிதில் அனைவருடனும் ஒன்றி விடமாட்டார்கள். நன்கு பழகிய பின்னரே மனம் விட்டு பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். அமைதியே ஸ்வரூபமாக கொண்ட இவர்களுக்கு யாரையும் ஈர்க்கும் எண்ணம் இருப்பதில்லை. தங்கள் வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக, முதலாளிக்கு விசுவாசமாகவும் நடந்து கொள்வார்கள்.
மூக்கு 3 கொக்கி மூக்கு:
இந்த கொக்கி போன்ற மூக்கை கொண்டவர்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை கொண்டு அதன் வழியில் பயணத்தை செலுத்துபவர்களாக இருப்பார்கள். எவ்வளவு தோல்விகளைச் சந்தித்தாலும் தளர்ந்து விடாமல் தொடர்ந்து விடாமுயற்சியினை மேற்கொள்பவர்கள் ஆக இருப்பார்கள். எவருடனும் பகைமையை வளர்த்துக் கொள்ள விரும்பாத இவர்கள் அனைவரையும் கவரும் நபராக இருப்பார்கள்.
மூக்கு 4 கழுகு மூக்கு:
கழுகு வடிவிலான இந்த மூக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் எப்பொழுதும் வெற்றியின் சொந்தக்காரர்களாக இருப்பீர்கள். உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கப் பெறும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல், இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். சிறந்த புத்தி கூர்மை உடையவர்களாகவும், சாதுரியமான பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள்.
மூக்கு 5 மேல் நோக்கிய மூக்கு:
இந்த மூக்கு சற்று மேல் நோக்கியபடி இருக்கும். இம்மூக்கை கொண்டவர்கள் யாருடைய உதவியுமின்றி சுயமாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். எவரையும் சார்ந்து நிற்காமல் இருப்பதை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். அனைவரையும் கவரும் வண்ணம் இவர்களுடைய குணாதிசயங்கள் இருக்கும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இவர்கள் விளங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இரக்க சுபாவமும், தைரியமும் மிகுதியாக இவர்களிடம் காணப்படும்.
மூக்கு 6 நேரான மூக்கு:
நேரான மூக்கை கொண்டவர்கள் தங்களைத் தாங்களே விரும்புபவர்களாக இருப்பார்கள். சிறந்த ஆளுமை திறனும், தீவிர பக்தியும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டு செயல்படுபவர்கள். மற்றவர்களை பற்றிய கணிப்பை சரியாக கூறக் கூடியவர்கள். இவர்களுடைய அறிவுக்கூர்மை சிறப்பாக இருப்பதால் எவராலும் இவர்களை வெல்ல முடியாது.
மூக்கு 7 ரோமன் மூக்கு:
ரோமன் மூக்கு கொண்டவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். தன்னை விட சுற்றியிருப்பவர்கள் உடைய நலத்தை பற்றி அதிகமாக நினைப்பவர்கள். தன்னைத் தானே வருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு அன்பை வாரி வழங்குபவர்கள். பலருடைய அலட்சியத்தால் அடிக்கடி வேதனைப்படுபவர்கள். பிடித்தவர்களுக்கு எதையும் செய்யக் கூடிய தைரியமானவர்கள்.
மூக்கு 8 வளைந்த மூக்கு:
வளைந்த மூக்கை கொண்டவர்கள் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். கருத்துத் திணிப்பை எவர் மீதும் ஒருபோதும் செய்யாதவர்கள். அனைவருக்கும் இவர்களுடைய குணாதிசயம் பிடித்திருக்கும். இவர்களை சுற்றி ஒரு பெரிய கூட்டமே எப்பொழுதும் இருக்கும். அன்பிற்கு மட்டுமே அடங்கிப் போகும் பாசக்காரகளாகவும் இருப்பார்கள்.