தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரின் 2021 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக பொகவந்தலாவ எல்டொப்ஸ் தோட்டத்தில் நடை பாதை ஒன்று கொங்கிரீட் பாதையாக செப்பனிடப்பட்டுள்ளது.
2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி திட்ட பிரிவினால் இந்தப் பாதை செப்பனிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக குன்றும் குழியுமாக இருந்த இந்தப் பாதையை உரிய வகையில் தற்போது செப்பனிடப்பட்டுள்ளதால் இந்தப் பாதையைப் பயன்படுத்தும் எல்டொப்ஸ் தோட்ட மக்கள் பெரிதும் நன்மை அடைந்து உள்ளனர்.