உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 15ம் திகதி நியமனம் வழங்கப்படும்.

0
267

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுக்கோளையடுத்து ஆசிரியர் உதவியாளராக சேவையாற்றி வந்த அனைவருக்கும் நியமனங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த வகையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தேர்தல் காலத்தில் சகல உதவி ஆசிரியர்களுக்கும் நியமனங்களை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் தொடர்ச்சியாக நியமனங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

இறுதியாக தற்போது எஞ்சியிருக்கின்ற அனைவருக்கும் நியமனங்களை வழங்குவதற்கு அவர் விடுத்த வேண்டுக்கோளையடுத்து மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களின் வழிகாட்டலில் அமைய எதிர்வரும் 15ம் திகதி நியமனங்கள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஆராயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபா ஊதியத்தில் மிக கஷ்டமான நிலையிலே சேவையாற்றி வந்துள்ளனர். அந்த வகையில் அவர்களுடைய பிரச்சினைகளை காலத்திற்கு காலம் எடுத்துச் சென்று வலியுருத்தியமையினால் சிறிது சிறிதாக நியமனங்களை வழங்கப்பட்டிருந்தன.

மேலும், எஞ்சியுள்ள நியமனங்ளை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நியமனங்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இன்னும் சில ஆசிரியர் உதவியாளர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகாத நிலையில் அவர்களின் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட்டு அவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here