உயிரை கையில் பிடித்துகொண்டு ஆற்றைக் கடக்கும் கர்கஸ்வோல்ட் தோட்ட மக்கள்…..

0
144

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பொகவந்தலா டின்சின் கர்கஸ்வோல்ட் நடுக்கணக்குப்பகுதியில் வாழும் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாலத்தினை கடப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் வாழும் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பல வருடகாலமாக குறித்த குறுக்கு வழி பாலத்தினுடாகவே தமது அன்றாட செயப்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.எனினும் குறித்த பாலம் உடைந்த போனதன் காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெண் பிள்ளை சுற்றுவட்ட பாதையினை பயன்படுத்த வேண்டியுள்ளது.

எனினும் அவசரமாக செல்ல வேண்டுமாயின் ஆபத்தினையும் உணராது இந்த உடைந்த பாலத்தினையே பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்;.
இவ்வாறு பயன்படுத்தும் போது பலர் தவறி விழுந்து காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
தேர்தல் காலங்களில் பலர் வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் எவரும் செய்து கொடுக்கவில்லை எனவும்இ முன்னாள் அமைச்சர் திகாம்பரம் 15 லட்சம் ரூபா செலவு செய்து இதனை அமைத்து தருவதாக அடிக்கல் நாட்டியதாகவும் ஆனால் இது வரை பாலம் புனரமைக்கப்படவில்லை என்றும் இங்கு வாழும் மக்கள் தெரிவித்தனர்.

இதே வேளை அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும் குறித்த பாலத்தினை புனரமைப்பு செய்து தருவதாக அடிக்கல் நாட்டி வைத்ததாகவும் ஆனால் அதுவும் இது வரை செய்து கொடுக்கவில்லை என்றும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த ஒற்றயடி பாதையில் பாலம் கடந்த 15 வருடங்களாக உடைந்து கிடப்பதனால் இங்கு வாழும் சுமார் 300 மேற்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் எனவே இது குறித்து உரிய கவனமெடுத்த உடனடியாக இப்பிரச்சினைகக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here