உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து சௌமிய பவாணில் நேற்று கலந்துரையாடல்!

0
150

உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணங்களிலும்,மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மாவட்ட பிரதிநிதிக்ள் தெரிவித்தனர்.

மேலும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக பல கோணங்களில் ஆராயப்பட்டது. இறுதி தீர்மானம் இம்மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் குழு, வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு,பிரச்சார குழு என மூன்று குழுக்கள் இதன் போது நியமிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here