டந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சமர்ப்பிக்காதமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.