ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்ய வேண்டும் அமைச்சர் ரவீந்திர, தொழிலாளர் துறைமார் இடையிலான தரகரை இல்லாதொழிக்க வேண்டும் அமைச்சர் ராதா

0
179

ஊழியர் சேமலாப நிதித்தினை தொழிலாளர் நலன் சார் விடயங்களுக்கு முதலீடு செய்யவதுதொடர்பில் சகல தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாட உள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்அட்டன் நகரில் புதிதாக அமைக்கப்படவுள்ள தொழிலாளர் அலுவலக மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 30.09.2018 இடம்பெற்றது இந் நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்னன், தொழில் ஆணையாளர் எ.விமலவீர, உதவித்தொழில் ஆணையாளர் மடுகல்ல உட்பட பலர்கலந்து கொண்ட நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் ஈ.பி.எப், நிதியில் 2 டிரில்லியன் ரூபாயும் ஈ.டி.எப்.நிதி 285 மில்லியன் ரூபாவும் இருக்கின்றது, எனைய நாடுகளில் இப்பணம் ஏனைய விடயங்களுக்கு முதலீடு செய்து வருமானத்தை அதிகரித்து கொள்ளவதற்கான நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளனர் நமது நாட்டில் மட்டுமே குறித்த பணத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றனர் கடந்த கலத்தில் ஊழியர் சேமலாப நிதியை முறைகேடாக பயன்படுத்தியமையினால் தொழிற்சங்கங்கள் இந்த பணத்தை வேறு விடயங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க தயங்குகின்றனர் எதிர்வரும் காலங்களில் அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தொழிலாளர் நலன் சார் திட்டங்களுக்கு முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்

இதன் போதே தொடர்ந்து உரையாற்றிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய வே.இராதாகிருஸ்னன் தொழிலாளர் அலுவலகம் புதிய கட்டிடம் ஒருலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர் வாழும் அட்டன் பிரதேசத்தில் அமைக்கப்படுவது மகிழ்சிக்குறிய விடயம் என்பதோடு தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட துறைமார்களுக்கும் இடையிலின தரகர்களை இல்லாதொழித்து தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் தொழிலாளர் அலுவலகம் அமைய வேண்டும் என தெரிவித்தார்

சிங்கள மொழி தெரியாத நிலையிலுள்ள தொழிலாளர் பிரச்சினைகளை தரகல்களினால் தோட்ட துறைமார் சார்பாக பேசி ஏமாற்றப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது அவற்றை இல்லாது செய்ய வேண்டும் நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மலையக என தமிழர்களுக்கு பல்வேறு அபிவிருதிகளை செய்து வருகின்றது அதே போல நாட்டின் ஜானாதிபதி ஜெனிவா உளிட்ட பல நாடுகளுக்கு சென்று சிறப்பாக உரையாற்றி நாட்டிற்கு நல்ல மதிப்பினையும் புகழையும் பெற்று வருகின்றார் நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்திற்கு தொடர்ந்து நாங்கள் ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்தார்.

 

மு.இராமச்சந்திரன், எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here