ஊவா மாகாணத்தில் ஹாலி – எல குயின்ஸ்டவுன் மைதானத்தில் நவம்பர் 06ம் திகதி தீபாவளி திருநாளை முன்னிட்டு மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுபோட்டி ஒன்றை நடாத்த குயின்ஸ்டவுன் விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட கிரிகட் எசோசியேஷன் செயலாளரும் சமூக சேவையாளருமான பகி பாலச்சந்திரன் வழிகாட்டலில் குயின்ஸ்டவுன் விளையாட்டு கழகத்திற்கான புதிய கட்டிடமொன்று அமைப்பதற்கான தொடக்கபணியும் தீபாவளி திருநாளை முன்னிட்டு மலையக கால்பந்து அணிகளுக்கான காலபந்து சுற்றுபோட்டியும் எதிர்வரும் நவம்பர் 6 ம் திகதி காலை 8.00 மணியளவில் குயின்ஸ்டவுன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
6 பேர் கொண்ட மலையக அணிகள் மாத்திரம் இப்போட்டியில் கலந்து கொள்ள முடிவதோடு முதல்பரிசு 20000 ரூபாயும் வெற்றிக்கிண்ணமும்,இரண்டாவது பரிசாக 10000 ரூபாயும் வெற்றிக்கிண்ணமும் ,மூன்றாவது பரிசாக வெற்றிக்கிண்ணமும் வழங்குவற்கு போட்டி ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச கால்பந்து விதிமுறைகளையும் நடுவர்களின் தீர்மானமுமே கருத்தில் கொண்டு போட்டி நடாத்தப்படுவதோடு சுகாதார முறைகளை பின்பற்றி சகல போட்டிகளும் நடைபெறும் என்று குயின்ஸ்டவுன் விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது.
நீலமேகம் பிரசாந்த்