எஞ்சிய IPL போட்டிகளை அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு உத்தேசம்.

0
232

இடைநிறுத்தப்பட்ட இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

பெரும்பாலும் இந்த தொடர் செப்டம்பர் மாதம் 18 அல்லது 19ஆம் திகதிகளில் ஆரம்பமாகும் என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொவிட்- 19 பெருந்தொற்று தீவிரமாக பரவும் நிலையில், ஐ.பி.எல். தொடரின் 31 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் குறித்த போட்டிகளை செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொடரின் இறுதிப்போட்டி ஒக்டோபர் மாதம் 9ஆம் அல்லது 10ஆம் திகதிகளில் இடம்பெறும் என்றும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here