முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோமீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த கட்டண குறைப்பை அமுல்படுத்தவுள்ளதாக, தேசிய முச்சக்கரவண்டிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கான சலுகையை மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்காகவே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதனை அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் அங்ஜன பிரியன்ஜித் இதனை எமது செய்தி பிரிவிடம் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டமையை தொடர்ந்து, தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.