எதிர்வரும் 6 தினங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டு நிவர்த்தி செய்யப்படும்

0
193

நாடு முழுவதும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், எதிர்வரும் 6 தினங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டு நிவர்த்தி செய்யப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப் பிரிவின் பணிப்பாளர் ஜனக்க பத்திரத்ன தெரிவிக்கின்றார்.

இனிவரும் காலங்களில் ஒவ்வொரு இரண்டு தினங்களுக்கும் ஒரு தடவை, சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வரும் எனவும் அவர் கூறுகின்றார்.
நாளாந்தம் 70,000 சிலிண்டர் சந்தைக்கு தேவைப்படும் நிலையில், தற்போது நாளாந்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிலிண்டர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சமையல் எரிவாயுவை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கு அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சமையல் எரிவாயுவிற்கான கேள்வி, மழை போன்ற காரணங்களே, சமையல் எரிவாயு கொள்வனவிற்காக மக்கள் வரிசையில் இருக்க காரணம் என அவர் கூறுகின்றார்.

எனினும், வழமை போன்று நாட்டிற்கு தேவையான சமையல் எரிவாயு நாளாந்தம் விநியோகிக்கப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப் பிரிவின் பணிப்பாளர் ஜனக்க பத்திரத்ன தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here